வைக்கோல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Added : ஜன 27, 2022 | |
Advertisement
திருவாடானை : வைக்கோல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருவாடானை தாலுகாவில் விவசாய அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு வைக்கோல் விலை குறைந்ததால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து பாண்டுகுடி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்படும் வைக்கோல் கடந்தாண்டு 600 ரூபாய் வரை விலை

திருவாடானை : வைக்கோல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருவாடானை தாலுகாவில் விவசாய அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு வைக்கோல் விலை குறைந்ததால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து பாண்டுகுடி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்படும் வைக்கோல் கடந்தாண்டு 600 ரூபாய் வரை விலை போனது. இந்தாண்டு 400 ரூபாய்க்கு தான் போகிறது. கையால் அறுவடை செய்யும் போது நீளமான வைக்கோல் கிடைக்கும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது துண்டாகி விடுவதால் வைக்கோல் வீணாகிறது. இந்த வைக்கோலை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியாது என்பதால் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு, சாகுபடி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை. இந்நிலையில் வைக்கோல் விலை குறைந்து விட்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X