மானாமதுரை நகராட்சி முதல் தலைவர் யார்

Added : ஜன 27, 2022 | |
Advertisement
மானாமதுரை : மானாமதுரை நகராட்சியின் முதல் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் தி.மு.க.,-- அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின் முதல் நகராட்சி தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்நகர் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். நகராட்சி சீரமைக்கு பின் 27 வார்டுகள் பிரிக்கப்பட்டு தேர்தல்

மானாமதுரை : மானாமதுரை நகராட்சியின் முதல் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் தி.மு.க.,-- அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின் முதல் நகராட்சி தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்நகர் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். நகராட்சி சீரமைக்கு பின் 27 வார்டுகள் பிரிக்கப்பட்டு தேர்தல் நடக்க உள்ளன. இங்கு தலைவர் பதவியை ஆதிதிராவிடர் (பொது) பிரிவினருக்கு மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனால் முதல் நகராட்சி தலைவர் என்ற பதவியை கைப்பற்ற தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., மாரியப்பன் கென்னடி, பெரியகோட்டை ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை செயலாளர் மகேந்திரன் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., -- அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்புகள் உண்டு. மாநில தேர்தல் கமிஷன் இங்கு தனிக்கவனம் செலுத்தி தேர்தலை நடத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X