மானாமதுரை, : மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் சுப்ரமணியர், ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.
இக்கோயிலில் கும்பா பிேஷகம் நடந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டல அபிேஷக மற்றும் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்தனர். பெண்கள் முளைப்பாரி உற்ஸவமாக எடுத்து சென்று கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை பூசாரி பாலசுப்பிரமணி செய்திருந்தார்.