சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தேர்வுக்கு ராகுல் வார்த்தைக்கு கட்டுப்படுவேன் என மாநில காங்., தலைவர் சித்து தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நாளுக்குநாள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தலைநகர் சண்டிகரில் நடந்த காங்கிரஸ் முக்கிய கூட்டமொன்றில் ராகுல் உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, 'பஞ்சாபின் முதல்வர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்யும். இதற்கு நான் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராகுல் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியில் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகி புது கட்சி துவங்கி உள்ளார். தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதேபோல நவ்ஜோத் சிங் சித்து தற்போது முதல்வர் சரண்ஜித் சிங் உள்ளிட்ட பலர் உடன் கட்சிக்குள்ளேயே மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE