உள்ளாடை குறித்து கருத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (3)
Advertisement
போபால்:ஹிந்தி 'டிவி' தொடர் நடிகை ஸ்வேதா திவாரி, தன் உள்ளாடை குறித்து கருத்து தெரிவிக்கையில் கடவுளை தொடர்புபடுத்தி பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 'ஷோ ஸ்டாப்பர்' என்ற ஹிந்தி வலை தொடரின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், 'டிவி' தொடர்களில் பிரபலமான நடிகை ஸ்வேதா திவாரி நடித்துள்ளார். அவருடன், 'மஹாபாரதம்' தொடரில்
 உள்ளாடை குறித்து கருத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை

போபால்:ஹிந்தி 'டிவி' தொடர் நடிகை ஸ்வேதா திவாரி, தன் உள்ளாடை குறித்து கருத்து தெரிவிக்கையில் கடவுளை தொடர்புபடுத்தி பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 'ஷோ ஸ்டாப்பர்' என்ற ஹிந்தி வலை தொடரின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், 'டிவி' தொடர்களில் பிரபலமான நடிகை ஸ்வேதா திவாரி நடித்துள்ளார். அவருடன், 'மஹாபாரதம்' தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற நடிகர் சவுரவ் ராஜ் ஜெயின், பெண்களின் உள்ளாடை வடிவமைப்பாளராக நடித்துள்ளார். 'பேஷன்' துறை பற்றிய இந்த தொடரில் நடித்துள்ள நடிகர் - நடிகையர் நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களுடன் உரையாடினர்.

அப்போது நடிகை ஸ்வேதா திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''என் உள்ளாடைகளை கடவுள் தான் அளவெடுத்தார்,'' எனக் கூறினார். நடிகர் சவுரவ் ஜெயின் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தை தொடர்பு படுத்தி அவர் பேசினார். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து பா.ஜ.,வை சேர்ந்த ம.பி., உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவிடம் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது:நடிகை ஸ்வேதா திவாரியின் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது. இது குறித்து விசாரணை நடத்தி, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி போபால் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
01-பிப்-202206:53:06 IST Report Abuse
Bush ஏற்கனவே ரெண்டு பேர் இந்த அம்மணியை கலியாணம் பண்ணி டைவோர்ஸ் பண்ணினாங்க ..
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
28-ஜன-202214:47:26 IST Report Abuse
sridhar இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமான ஒரு செய்தி இதற்கு ஒரு விசாரணை அட போங்கப்பா
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
28-ஜன-202210:28:26 IST Report Abuse
Subramaniyam Veeranathan நாடு முன்னேற இந்த செய்தியும் இப்படிப்பட்ட அரசியல்வாதியும் தான் தேவை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X