'இது மூணு சக்கர தேரு... என்னை நம்பி வந்து ஏறு!'

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை, ; ''எங்களிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பும், மரியாதையும் மட்டுமே. அவர்களே என் கண்ணுக்கு தெரிந்த கடவுள்,'' என, ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை நெகிழ்ச்சியுடன் கூறினார்.சென்னை, ஈஞ்சம்பாக்கம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; ஆட்டோ ஓட்டுனர்களில் இவர், மிகவும் வித்தியாசமானர். மற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்.
 'இது மூணு சக்கர தேரு... என்னை நம்பி வந்து ஏறு!'

சென்னை, ; ''எங்களிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பும், மரியாதையும் மட்டுமே. அவர்களே என் கண்ணுக்கு தெரிந்த கடவுள்,'' என, ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை நெகிழ்ச்சியுடன் கூறினார்.சென்னை, ஈஞ்சம்பாக்கம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; ஆட்டோ ஓட்டுனர்களில் இவர், மிகவும் வித்தியாசமானர். மற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இவரது செயலை அறிந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தன் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:* உங்களின் சொந்த ஊர்?தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ரெட்டவயல்.* குடும்பம் பற்றி...அப்பா கணேசன்; சமையல்காரர். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். 38 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தார். அம்மா அம்சவள்ளி; இல்லத்தரசி. அக்கா செல்வராணி; ஓட்டல் நடத்துகிறார். அண்ணன்கள் செந்தில்குமார், ஜெகதீசன். இருவரும் சென்னையில் ஆட்டோ ஓட்டுகின்றனர். துவக்கத்தில் அப்பாவும் ஆட்டோ ஓட்டித்தான் எங்களை வளர்த்தார். இப்போது, சொந்த ஊரில் விவசாய தொழில் செய்கிறார்.* படிப்பு?பிளஸ் 2 முடித்துள்ளேன். * இந்த தொழிலுக்கு வந்தது எப்படி?சென்னையில், 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். ஒரு விபத்து மாதிரி தான் வந்தேன்.


அதன்பின், ஆத்மார்த்தமாக நேசித்து செய்கிறேன். வாடிக்கையாளர்கள், எங்களிடம் பாதுகாப்பு உணர்வும், மரியாதையும் மட்டுமே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தான் என் கண்ணுக்கு தெரிந்த கடவுள். வாடிக்கையாளர்களிடம் எவ்வித போலித்தனமும் இல்லாமல், சத்தியத்திற்கு நிகராக உண்மையாக நடந்து கொள்கிறேன். அது, என்னை வாழ வைக்கிறது.* உங்கள் ஆட்டோ, நுாலகம் போல இருக்குமாமே... அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் உண்டா?ஆட்டோவை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பேன். சீருடை அணியாமல், ஆட்டோவை இயக்கியதே கிடையாது. கூடுதல் கட்டணம் வசூலிக்கவே மாட்டேன். காசை தேடி நீங்கள் ஓடினால், காசு ஒருபோதும் உங்களிடம் வராது.செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதுவே உங்களுக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கும். மனித உயர்வுக்கு உண்மையை விட வேறு ஒன்றும் உதவி செய்யாது.என் ஆட்டோவில், காலை, மாலையில் வெளிவரும், ஒன்பது நாளிதழ்கள் இருக்கும். வாரம் மற்றும் மாதம் வெளியாகும், 35 பருவ இதழ்கள் இருக்கும். சிறிய அவில் 'ஸ்மார்ட் டிவி' மற்றும் 'பிரிஜ்' இருக்கும்.இதில், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இருக்கும். பழங்கள், சாக்லெட் மற்றும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகள் இருக்கும். 'வைபை' இணையதள சேவை, 'லேப்டாப், டேப்லெட்' என, அதிநவீன கருவிகள் உள்ளன.நான் செல்லும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து அறிய கருவி ஒன்றும் வைத்துள்ளேன். 'சைன் லாங்க்வேஜ்' மொழியில் தெரிவிப்பதை, என்னிடம் சத்தமாக தெரிவிக்கும் கருவியும் உள்ளது.ஆட்டோவில் குடைகள் கட்டாயம் இருக்கும். மழைக் காலத்தில், வாடிக்கையாளர்களிடம் குடையை கொடுத்து அனுப்புவேன். அவர்கள், நான் தெரிவிக்கும் கடைகளில் கொடுத்து விடுவர். அதன்பின், நான் வாங்கிக் கொள்வேன். குடையை வாங்கிச் சென்றவர்கள், திருப்பி தராமல் இருந்ததே இல்லை.என் சேவை குறித்து, வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கின்றனர்; குறைகள் என்ன என்பதை அறிய, ஐந்து கேள்விகளும் அதற்கு பதில் எழுத, பரீட்சை அட்டை மற்றும் பேனா வைத்திருப்பேன். அதில், 'டிக்' செய்து, மொபைல் போன் எண்; இ - மெயில் முகவரி எழுதினால் போதும். குறை, நிறை சுட்டிக் காட்டியவர்களில், சிறந்தவர்களை மாதம் ஒருவர் என தேர்வு செய்து, என் வருமானத்தில் அவர்களுக்கு, 1,000 ரூபாய் அனுப்பி வைப்பேன்.* இந்த தொழிலில் நீங்கள் கற்ற பாடம்?ஆட்டோ ஓட்டுனர்களின் தோற்றம், மிக மிக முக்கியம். வாடிக்கையாளர்கள் ஆளை பார்த்த உடனே கணித்து விடுவர். நான் சொல்லாமலேயே, இவரது ஆட்டோவில் பாதுகாப்பாகவும், பயமின்றியும் பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு வர வேண்டும்.சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் போக்குவரத்தை சீர் செய்தால், அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். அதுபோல தான் ஆட்டோ ஓட்டுனர்களும். ஆட்டோவை தொடும் முன், சீருடை அணிந்து இருக்க வேண்டும்.தினமும் முகச் சவரம் செய்திருக்க வேண்டும். உடைகள் சுத்தமாகவும், நேர்த்தியுடனும் இருக்க வேண்டும். ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பதெல்லாம், மனித செயலே இல்லை.* ஆட்டோ ஓட்டுனர்கள் கஷ்டத்தில் இருப்பதாக புலம்புகின்றனரே?யாருக்குத் தான் கஷ்டம் இல்லை! கஷ்டமில்லாத மனிதர்கள் ஒருவரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்! எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு. ஒரு நாளைக்கு, 10 பேராவது ஆட்டோவில் ஏறுவர். அவர்கள் ஏன், மீண்டும் நம் ஆட்டோவை தேடி வரவில்லை என யோசிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள், என்னை ஆட்டோ ஓட்டுனர் போல நடத்துவதே இல்லை. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் போலதான் பழகுகின்றனர். 'காலை காட்சி படம் பார்க்க வேண்டும்' என, அழைப்பர்.அந்த நேரத்தில், நான் வேறு ஒருவரை அழைத்துச் செல்ல ஒப்புதல் அளித்து விட்டேன் என, கூறுவேன். 'அப்படியானால், மதியம் காட்சிக்கு போகிறேன். நீங்கள் அப்போது வாருங்கள்' என, கூறுவர்.வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வர வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும், தொழிலுக்கும், அவர்களின் மனசாட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும். தேவைக்கு மீறி ஆசைப்பட்டால், வாழ்வு சூன்யமாகி விடும். வாழ்க்கை மிகப்பெரிய கலை.* எதிர்கால திட்டம்?பல ஆட்டோ ஓட்டுனர்கள், 'லுாசு, மென்டல்' என, என்னை சொல்கின்றனர். அவர்கள் சொல்வதை நிராகரித்து விட்டேன். கடந்த, 2020ல் டில்லியில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற, ஜி.பி.எஸ்., என்ற கூட்டம் நடந்தது. அதில் நானும் பேச அழைக்கப்பட்டேன். அதற்கு காரணம், இந்த ஆட்டோ தொழில் தான்.* உங்கள் ஆட்டோவில் யாருக்கு இலவச பயணம்?ஆசிரியர்களுக்கு, டாக்டர்கள், துாய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு கட்டணம் கிடையாது. குழந்தைகள் தினம் மற்றும் பெண்கள் தினத்திற்கு பயணிக்கும், குழந்தைகள் மற்றும் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை.இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.முன்மாதிரியாகத் திகழும் 'ஆட்டோ அண்ணாதுரை'யைப் பாராட்ட விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 98841 23413.***

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜன-202219:30:11 IST Report Abuse
D.Ambujavalli பாராட்டுக்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டு சிலராவது மாறினால் அதுவே இவரின் பெரிய வெற்றி
Rate this:
Cancel
28-ஜன-202217:20:47 IST Report Abuse
Tamijeselvane வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்வாழ்க பணிவளர்க அவர் புகழ் அன்புடன் தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
Rate this:
Cancel
KRISHNAN R - chennai,இந்தியா
28-ஜன-202211:37:00 IST Report Abuse
KRISHNAN R தினமலர் நாளிதழ் ஏதோ தவறு செய்தது போல.. ஆட்டோ சங்கங்கள்.. ஆர்பாட்டம் நடத்தினர். இவர் போல இல்லாவிட்டாலும்.. குறைந்த பட்சம்... uniform மற்றும் முககவசம்... அணிய.. ஆட்டோ ஓட்டுனர்கள்.. கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X