சென்னை, : தி.மு.க., உறுப்பினர் குடும்ப விழாவில், ''முதல்வர் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணி தலைவர்களுடனும் கூட அதிகம் பேச மாட்டார்,'' என மறைமுகமாக தாக்கிப் பேசிய காங்., தலைவர் அழகிரிக்கு, முதல்வர் ஸ்டாலின், ''நான் அதிகம் பேசமாட்டேன்; செயலில் தான் திறமையை காட்டுவேன்,'' என பதிலடி கொடுத்தார்.
சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் தரணி - ராகவேந்திர மூர்த்தியை வாழ்த்தி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:யார் திட்டினாலும் அதைப் பற்றி கவலைப் படாதவர் மணமகளின் தந்தை டி.கே.எஸ்.இளங்கோவன். இது, அவரிடம் உள்ள நல்ல குணம். கே.எஸ்.அழகிரி பேசுகையில், 'நம் முதல்வர் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இடத்தில் கூட அதிகம் பேச மாட்டார்' என்றார்.
என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து, செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலையில் தேர்தலை நடத்துகிறோம்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
'கூட்டணிப் பேச்சின்போதெல்லாம், ஸ்டாலின் நேரடியாக பேசாமல், கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்தே பேச்சு நடத்தி, கூட்டணியை இறுதி செய்வார். கடந்த முறை தேர்தலில், காங்., தலைவர் அழகிரிக்கும் இந்த நிலை ஏற்பட்டது. 'இதைச் சுட்டிக் காட்ட முயன்ற அழகிரிக்கு,ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்' என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE