புதுடில்லி:டில்லியில் இளம் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து, தலைமுடியை வெட்டி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஆனந்த் விகார் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண்ணை கஸ்துாரி பாய் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று முன்தினம் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர்.அத்துடன் அந்தப் பெண்ணின் தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது பற்றிய புகாரின் அடிப்படையில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நண்பர்களாக இருந்துள்ளனர். சமீபத்தில் அந்த சிறுவன்தற்கொலை செய்து கொண்டான். இதற்கு அந்தப் பெண் தான் காரணம் என சிறுவனின் குடும்பத்தினர் கருதினர்.பெண்ணுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில், சிறுவனின் குடும்பத்தினர் இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.