உணவுப் பொருள் கழிவில் கட்டடம்

Added : ஜன 28, 2022
Advertisement
உணவுப்பொருள் கழிவுகளில் இருந்து கட்டட கட்டுமானத்துக்கு தேவையான பொருளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.உலகளவில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப்பொருள் மற்றும் அதன் கழிவுகள் வீணடிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் ஆய்வில் ஜப்பானின் டோக்கியோ பல்கலை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். வீணாக்கப்படும் உணவுப்பொருளை மரப்பொடி போல செய்து கட்டட பணிக்கு பயன்படுத்துவது தொடர்பான
உணவுப் பொருள்  கழிவில்  கட்டடம்



உணவுப்பொருள் கழிவுகளில் இருந்து கட்டட கட்டுமானத்துக்கு தேவையான பொருளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உலகளவில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப்பொருள் மற்றும் அதன் கழிவுகள் வீணடிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் ஆய்வில் ஜப்பானின் டோக்கியோ பல்கலை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
வீணாக்கப்படும் உணவுப்பொருளை மரப்பொடி போல செய்து கட்டட பணிக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் வெற்றி பெற்று
உள்ளனர்.
இதன்படி வாழைப்பழ தோல், முட்டைகோஸ் இழை போன்ற வீணாக குப்பையில் கொட்டப்படும் உணவுப்பொருள் கழிவுகள் மற்றும் கடல்பாசி போன்றவற்றை வெப்பப்படுத்தி
அதை பொடியாக்கி கட்டடம் கட்டுவதற்கான மூலப்பொருளை
உருவாக்கியுள்ளனர். இது சாதாரணமாக சிமென்ட், மணலை பயன்படுத்தி கட்டடப்படும் 'கான்கிரீட்'
கட்டடத்தை விட மூன்று மடங்கு பலம் வாய்ந்ததாக உள்ளது.
பூசணிக்காயை தவிர மற்ற உணவுப்பொருள் கழிவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

உலகளவில் ஆண்டுதோறும் உணவுப்பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது என உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 72.25 லட்சம் கோடி.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 30 - 40 சதவீத உணவுகள் வீணடிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X