கோத்தகிரி:கோத்தகிரி அருகே, அனுமதியின்றி காட்டு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது குறித்து, வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகம், அரவேனு- அளக்கரை சாலையில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதியின்றி நாவல் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
மேலும், சாலையோரத்தில் உள்ள மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.உள்ளூர் வனத் துறையினர் சிலர், மரம் வெட்ட உடந்தையாக இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 'இப்பகுதியை வனத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியதால், வனத் துறை விசாரணை துவங்கியுள்ளது.
வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோத்தகிரி வனச்சரகர் சிவா கூறுகையில், ''மரம் வெட்டுவதற்கான அனுமதி பெறவில்லை. ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement