பிராந்திய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு

Added : ஜன 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:''பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.இந்தியா - --மத்திய ஆசிய நாடுகள் இடையேயான முதல் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று நடந்தது. மூன்று இலக்குஇதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
 பிராந்திய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு

புதுடில்லி:''பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


இந்தியா - --மத்திய ஆசிய நாடுகள் இடையேயான முதல் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று நடந்தது. மூன்று இலக்குஇதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் எதிர்காலத்தில் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், நட்புறவை பாராட்டவும், இந்த மாநாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா ஆழமான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி துறையில், கஜகஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. பிராந்திய பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான இலக்குகள் மற்றும் கவலைகளை கொண்டுள்ளோம். ஆப்கனில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு மனித நேய அடிப்படையில் இந்தியா பல உதவிகளை செய்து வருகிறது.


அதேநேரத்தில் ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என, இந்தியா வலியுறுத்தி வருகிறது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்றைய மாநாட்டில் மூன்று இலக்குகளை நாம் நிர்ணயிக்க வேண்டும். அணுகுமுறைமுதலாவதாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.


இரண்டாவதாக, நம் ஒத்துழைப்பிற்கு பயனுள்ள கட்டமைப்பை வழங்க வேண்டும். இதில் அனைத்து நாடுகளுக்கும் இடையே வழக்கமான தொடர்புக்கான ஒரு தளத்தை நிறுவுவதற்கு வழி கிடைக்கும். மூன்றாவதாக நம் ஒத்துழைப்பிற்கு ஒரு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற உதவும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X