சமத்துவமின்மையை குறைப்பதாக பட்ஜெட் இருக்க வேண்டும் : சுப்பாராவ்

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி : வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு பட்ஜெட்டின் குறிக்கோளும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக
சமத்துவமின்மை, பட்ஜெட், சுப்பாராவ்


புதுடில்லி : வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:


latest tamil newsஒவ்வொரு பட்ஜெட்டின் குறிக்கோளும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக இருக்கும்.இந்த பட்ஜெட்டும் அவ்வாறே இருக்கும். அதோடு, இந்த பட்ஜெட், பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும் ஏற்ப இருக்க வேண்டும்.
உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என, சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய பரந்துபட்ட சமத்துவமின்மை, தார்மீக ரீதியாக தவறானது.
மேலும் அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது, நம் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளையும் சிதைக்கும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டின் கருப்பொருளாக இருக்க வேண்டியது, வேலைவாய்ப்பு. தீவிர வேலைவாய்ப்பு நமக்கு தேவைப்படுகிறது. வேலைவாய்ப்பை வழங்க வளர்ச்சி தேவைப்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-ஜன-202216:43:16 IST Report Abuse
DVRR சமத்துவமின்மையை குறைப்பதாக பட்ஜெட்??இந்த மாதிரி நட்டு கலந்த கேஸினால் தான் இந்துக்கள் மட்டும் செகுலர் டோலெராண்ட்டாக இருக்கவேண்டும் ஆனால் முஸ்லிம்கள் கிறித்துவர்கள் அவர்களை பற்றி ஒரு சிறிய குறை கண்டு பிடித்தல் கொன்ஜம் கூட secular tolerantaaga இல்லாமல் பொங்கி வருகின்றனர் . சமத்துவம் , secular, tolerant இந்தியர்கள் அனைவருக்கும் என்று Indian Constitution ல் செய்தே தீரவேண்டும் அதை மீறுபவர்களுக்கு தண்டனை என்று இருக்கவேண்டும் அப்போ தான் ஏ பாவிகளே ஆட்டம் குறையும்.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
28-ஜன-202209:40:15 IST Report Abuse
Rajarajan அரசின் வருமானத்தில் முழுசையும் அரசு ஊழியருக்கு தூக்கி கொடுத்துவிட்டு, மற்ற தனியார் துறை ஊழியர் தலையில் கூடுதல் வரி என்ற மிளகாய் அரைப்பது தானே, எல்லா அரசின் நோக்கமும். இதில் சமத்துவமாவது, வெங்காயமாவது. மைக் கிடைத்தால், எதுவேண்டுமானாலும் பொருத்தமில்லாமல் பேசிவிடுவதா ??
Rate this:
Cancel
binakam - chennai,இந்தியா
28-ஜன-202208:36:38 IST Report Abuse
binakam கஜானாவை திறந்து விடுவது தான் சமத்துவம் ஊழல் இல்லாத மத்திய அரசு -இதை ஏன் கவனத்துல கொள்ள விரும்பறதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X