பா.ஜ., தனித்து போட்டியா? அண்ணாமலை இன்று முடிவு!

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (62)
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று (ஜன.,28), மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியை பலப்படுத்த, மாவட்ட வாரியாக சென்று, கட்சியினரை
BJP,Bharatiya Janata Party,Annamalai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று (ஜன.,28), மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியை பலப்படுத்த, மாவட்ட வாரியாக சென்று, கட்சியினரை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.இதனால், பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் பா.ஜ.,வுக்கு ஏற்கனவே இருந்த ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்பட்சத்தில், பா.ஜ.,வுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே கிடைக்கும். அதில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், மாநிலம் முழுதும் பா.ஜ., பெறும் ஓட்டு சதவீதம், மற்ற கட்சிகளுடன் குறைவாகவே இருக்கும்.


latest tamil newsஅதேசமயம், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிட்டால், அதிக ஓட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும். தி.மு.க., -- அ.தி.மு.க.,வுக்கு அடுத்து, பா.ஜ., மூன்றாவது பெரிய கட்சி என்பது, உறுதி செய்யப்படும். எனவே, தனித்து போட்டியிடுவது தொடர்பாக, சமீபத்தில் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, மாநில மைய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-ஜன-202217:55:25 IST Report Abuse
Nagarajan D வெற்றி பெற வாழ்த்துக்கள்... நம் தேசம் முன்னேற 2 அல்லது 3 கட்சிகள் மட்டுமே இருக்கவேண்டும்... கண்டகண்டவானுங்களும் கட்சி ஆரம்பித்து நாட்டை அவனவன் இஷ்ட்த்திற்கு ஆட்டிவைக்கிறான். காங்கிரஸ் பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட் போதும் மற்ற எல்லா பிராந்திய கட்சிகளையும் ஒழித்தால் தான் நாடு சுபிட்சம் அடையும்...
Rate this:
28-ஜன-202220:19:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஆண்மகனா என்று ADMK வை கேட்ட நீங்கள் ஆண்மகன் என்றால் தனித்து நின்று காட்டு ,...
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
29-ஜன-202213:01:52 IST Report Abuse
mindum vasanthamடெக்சாஸ் முன்னேற்ற கழகம் , கலிபோர்னியா முன்னேற்ற கழகம் போன்றவை நாம் பார்ப்பதில்லை...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
28-ஜன-202217:07:41 IST Report Abuse
Priyan Vadanad இவர்கள் தனித்துதான் போட்டியிடவேண்டும். மதமாற்ற கொள்கையை முன்னிறுத்தி அண்ணாமலை பிரசாரம் செய்யவேண்டும். இந்து முன்னணி ஒத்துழைக்கவேண்டும். கண்டிப்பாக மிகப்பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெரும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-ஜன-202217:07:09 IST Report Abuse
elakkumanan அப்போ, தனியா போட்டியிட்டால் அது ஆண்மை தனமா? வாசக அன்பர்களே........ ஆளும் கட்சியின் பெரும் கோவத்துக்கு ஆளாகாதீர்கள் பிலீஜு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X