456 பேருக்கு கொரோனா: அரசு பள்ளிக்கு 'லீவு'

Added : ஜன 28, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நான்கு தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 456 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, டி.கோட்டாம்பட்டி சுப்பையா நகர், பாலாஜிநகர், ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 88 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமங்கலம்புதுார், கூளநாயக்கன்பட்டி,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நான்கு தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 456 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, டி.கோட்டாம்பட்டி சுப்பையா நகர், பாலாஜிநகர், ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 88 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமங்கலம்புதுார், கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி, கோலார்பட்டி, சீலக்காம்பட்டி, எஸ்.மலையாண்டிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெகமம், புரவிபாளையம், திப்பம்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், 240 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாலுகாவில் காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பது ஆசிரியர்களுக்கும், ஒரு மாணவனுக்கும் நேற்று தொற்று பரவல் உறுதியானது. இதனை தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகள், ஆசிரியைகள் தங்கியிருந்த அறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வகுப்பறைகள் பூட்டப்பட்டன.மேலும், சொலவம்பாளையம், கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், நல்லட்டிபாளையம், சொக்கனுார், கோவில்பாளையம், வடசித்துார் பகுதிகளை சேர்ந்த, 121 பேருக்கு தொற்று பரவல் உறுதியானது. தொற்று பாதித்தோர் வசித்த வீடுகள், வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.ஆனைமலைஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு நகர், நா.மூ.சுங்கம்., வேடசெந்துார், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், மீனாட்சிபுரம், காளியாபுரம், செமணாம்பதி உள்பட, 22 பகுதிகளில், 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தோருடன் தங்கியிருந்த, 167க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.வால்பாறைவால்பாறை நகரில் நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X