எந்த விளைவையும் சந்திக்க தயார்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (5)
Advertisement
வாஷிங்டன் : உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளது.கிழக்கு ஐரோப்பாவைசேர்ந்த உக்ரைன் 'நேட்டோ' எனப்படும்வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணையவிரும்புகிறது. இதற்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த இணைப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
Russia, US, Ukraine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன் : உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளது.



கிழக்கு ஐரோப்பாவைசேர்ந்த உக்ரைன் 'நேட்டோ' எனப்படும்வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணையவிரும்புகிறது. இதற்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த இணைப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதையடுத்து உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கில் அந்நாட்டு எல்லையில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்த போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் கவலைகள் மற்றும் ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய கடிதத்தை ரஷ்ய அரசிடம் அந்நாட்டிற்கான அமெரிக்க துாதர் ஜான் சுல்லிவன் வழங்கியுள்ளார்.

உக்ரைன் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். பேச்சு வாயிலாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. இதற்கு, உக்ரைன் எல்லையில் இருந்து ராணுவத்தை ரஷ்யா விலக்கி, தீர்வுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ரஷ்யாவின் இறுதி முடிவை எதிர்பார்த்துள்ளோம். ரஷ்யா எத்தகைய முடிவை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து 'நேட்டோ' அமைப்பும், உக்ரைனை இணைத்துக் கொள்ளும் முடிவில் மாற்றமில்லை என திட்டவட்டமாக நேற்று தெரிவித்துள்ளது. 'உக்ரைன் மீது போர் தொடுக்கும் விருப்பம் இல்லை' என, ரஷ்யா தெரிவித்தாலும், அண்டை நாடான பெலாரஸ் உடன் இணைந்து போர் பயிற்சிகளை நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜன-202208:58:01 IST Report Abuse
பேசும் தமிழன் அமெரிக்கா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்... சொல்ல போனால்... உங்களிடம் இருக்கும் ஆயுதங்களை விட அதிக திறன் வாய்ந்த ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது.... உங்கள் மிரட்டலுக்கு பயப்பட அது இத்த செத்த ஈராக் அல்லது ஈரான் இல்லை... அது ரஷ்யா
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
28-ஜன-202208:49:01 IST Report Abuse
மணி அடிச்சு காட்டுங்கடா யாரு பெருசுன்னு
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-ஜன-202208:44:34 IST Report Abuse
Lion Drsekar இப்போதான் ஒருவழியாக மூன்றாவது அலைக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம் தேர்தல் வேறு வருகிறது அது முடிந்த பின்பு மீண்டும் ஞாயிறு மற்றும் இரவு பழைய முறையை அமல்படுத்தப்படும் என்ற நிலையில் இவர்கள் வேறு உலக சண்டைக்கு வித்திடுகிறார்களே,. யாரோ ஆட்டிவைக்கிறார்கள் நடக்கட்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X