மனு தாக்கல் இன்று துவக்கம்; கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை : நகர்ப்புற தேர்தலுக்கான மனு தாக்கல், இன்று(ஜன.,28) துவங்கவுள்ள நிலையில், கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு, பிப்., 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; அதற்கான வேட்புமனு தாக்கல், இன்று துவங்குகிறது. நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள்
Tamil Nadu Local Body Election, EC

சென்னை : நகர்ப்புற தேர்தலுக்கான மனு தாக்கல், இன்று(ஜன.,28) துவங்கவுள்ள நிலையில், கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு, பிப்., 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; அதற்கான வேட்புமனு தாக்கல், இன்று துவங்குகிறது. நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்பட உள்ளன.இதற்காக, 649 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1,644 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலகங்களில், இன்று காலை 10:௦௦ மணி முதல் மாலை 5:௦௦ மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. மனு தாக்கல் முழுமையாக கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளது.சனிக் கிழமையான நாளையும், மனு தாக்கல் செய்யலாம் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இன்று துவங்கவுள்ள மனு தாக்கல் வரும் பிப்., 4ம் தேதி முடிகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X