போலீஸ் டைரி,,,,

Added : ஜன 28, 2022 | |
Advertisement
கார் மோதி பெண் பலிசெங்கல்பட்டு: வட மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்தவர் சுஜித்குமார், 45. இவரது மனைவி சத்யபிரியா, 45. தனியார் நிறுவன ஊழியர்கள். செங்கல்பட்டு, மகேந்திரா வேல்ர்ட் சிட்டியில் வசித்தனர்.கணவர் சுஜித்குமார், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் நேற்று முன்தினம் சென்றார். அதே பகுதியில், தனியார் கம்பெனி அருகில் சென்றபோது, பின்னால் வந்த 'பொலீரோ' கார்

கார் மோதி பெண் பலிசெங்கல்பட்டு: வட மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்தவர் சுஜித்குமார், 45. இவரது மனைவி சத்யபிரியா, 45. தனியார் நிறுவன ஊழியர்கள். செங்கல்பட்டு, மகேந்திரா வேல்ர்ட் சிட்டியில் வசித்தனர்.கணவர் சுஜித்குமார், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் நேற்று முன்தினம் சென்றார். அதே பகுதியில், தனியார் கம்பெனி அருகில் சென்றபோது, பின்னால் வந்த 'பொலீரோ' கார் மோதி விபத்தில் சிக்கினர்.அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்ததில், சத்யபிரியா ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முதியவர் தவறி விழுந்து மரணம்சதுரங்கப்பட்டினம்: கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் மெய்யூர் பகுதி, ராமு மகன் வெங்கடேசன், 66. நேற்று காலை 11:00 மணிக்கு, வீட்டின் மாடிக்கு செல்ல, படிகளில் ஏறியபோது, தவறி விழுந்து காயமடைந்தார். சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு, அவரை கொண்டு சென்றபோது, அவர் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X