பொதுமக்கள் உடல்நலத்தை பாதுகாக்க வழிமுறை கட்டமைப்பு மாதிரி ஆவணம்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில் பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாப்பதற்கான வழிமுறை கட்டமைப்பு மாதிரி ஆவணம் தயாரிக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நல மேம்பாட்டிற்கான அடுத்த 10 முதல் 20 ஆண்டுக்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதற்கு, சுகாதாரத்துறையின் சார்பில் மாதிரி ஆவணம் வடிவமைக்கப்படுகிறது.பொதுமக்களின் உடல்நல பிரச்னைகளுக்கு முதல்நிலை, இரண்டு

பெங்களூரு-கர்நாடகாவில் பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாப்பதற்கான வழிமுறை கட்டமைப்பு மாதிரி ஆவணம் தயாரிக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நல மேம்பாட்டிற்கான அடுத்த 10 முதல் 20 ஆண்டுக்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதற்கு, சுகாதாரத்துறையின் சார்பில் மாதிரி ஆவணம் வடிவமைக்கப்படுகிறது.பொதுமக்களின் உடல்நல பிரச்னைகளுக்கு முதல்நிலை, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை என மூன்று நிலைகளில் தயார் செய்யப்படுகிறது.இந்த மாதிரி ஆவணம் தயாரிப்பதற்கு பல்வேறு மருத்துவ பிரிவுகளை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் 30 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். நிமான்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் குருராஜ், குழுவினரை வழிநடத்துகிறார்.சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:மருத்துவ கட்டமைப்புக்கான மாதிரி ஆவணத்தை சுகாதாரத்துறை விரைவில் தயாரிக்கும். உதாரணமாக, தாலுகா அளவில், இதய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சில மருத்துவமனைகள் மட்டுமே இருக்கும். ஒருவருக்கு இதய பிரச்னைகள் தொடர்பான உடனடி சிகிச்சை அளிப்பதற்கு குறிப்பிட்ட மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் கொண்டு செல்லப்படுவர். சோதனை முயற்சியாக முதற்கட்டமாக, பெங்களூரு, கலபுரகி, பெங்களூரு, ஹூப்பள்ளி, மங்களூரு உட்பட 15 வருவாய் தாலுகாக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதே போல், ஒவ்வொரு மருத்துவ பிரிவுக்கான சிகிச்சைக்கும் முதல், இரண்டு, மூன்றாம் நிலை சிகிச்சை என மருத்துவமனைகள் இணைக்கப்படும். சிகிச்சை அளிப்பதற்கு செவிலியர்கள், மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X