பள்ளி அருகே தாழ்வான மின் இணைப்பு சாமுண்டீஸ்வரி நிறுவனம் நடவடிக்கை

Added : ஜன 28, 2022 | |
Advertisement
மைசூரு-சாமுண்டீஸ்வரி மின்வினியோக நிறுவனத்தின் சார்பில், பள்ளிகளின் அருகே தாழ்வாக உள்ள மின் இணைப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.முதற்கட்டமாக சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தாலுகாவில் 135 பள்ளிகளின் அருகே, தாழ்வாக மின் இணைப்புகள் இருப்பதை, சாமுண்டீஸ்வரி மின்வினியோக நிறுவனத்தின் சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினருக்கு

மைசூரு-சாமுண்டீஸ்வரி மின்வினியோக நிறுவனத்தின் சார்பில், பள்ளிகளின் அருகே தாழ்வாக உள்ள மின் இணைப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.முதற்கட்டமாக சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தாலுகாவில் 135 பள்ளிகளின் அருகே, தாழ்வாக மின் இணைப்புகள் இருப்பதை, சாமுண்டீஸ்வரி மின்வினியோக நிறுவனத்தின் சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன், துமகூரு மாவட்டத்தில் பள்ளி அருகே மின் இணைப்பு விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து, பாதுகாப்பில்லாத இணைப்புகளை அப்புறப்படுத்துமாறு மின் வினியோக நிறுவனங்களுக்கு, மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.சாமுண்டீஸ்வரி மின்வினியோக நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தாலுகாவில் மொத்தமாக 465 பள்ளிகள் உள்ளன. இதில் 135 பள்ளிகளின் அருகே ஆபத்தான முறையில் தாழ்வாக மின் இணைப்புகள் உள்ளது.இவற்றை அப்புறப்படுத்தி, வேறு பாதையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பள்ளி நிர்வாகத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X