எல்லாம் முடிஞ்சு போச்சு: இப்ராகிம் விரக்தி அறிவிப்பு

Added : ஜன 28, 2022 | |
Advertisement
பெங்களூரு-கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவி கை நழுவியதால், எரிச்சலடைந்துள்ள இப்ராகிம், ''காங்கிரசுக்கும், எனக்குமான அத்தியாயம் முடிந்தது,'' என கூறியுள்ளார்.இது தொடர்பாக, பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:கர்நாடக சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை, ஹரிப்பிரசாத்துக்கு அளித்துள்ள, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.சிவகுமார்,

பெங்களூரு-கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவி கை நழுவியதால், எரிச்சலடைந்துள்ள இப்ராகிம், ''காங்கிரசுக்கும், எனக்குமான அத்தியாயம் முடிந்தது,'' என கூறியுள்ளார்.இது தொடர்பாக, பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:கர்நாடக சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை, ஹரிப்பிரசாத்துக்கு அளித்துள்ள, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.சிவகுமார், ஹரிபிரசாத் ஒரே விதமான சிந்தனையாளர்கள் என்பதால், 'நல்ல டீம்' என காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா நினைத்திருக்கலாம். 25 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்தேன். திட்ட ஆணைய தலைவராக, பல திட்டங்களை செயல்படுத்தினேன். அன்னபாக்யா போன்ற முக்கியமான திட்டத்துக்கு ஆலோசனை கூறியது நான். சித்தராமையாவுக்காக, தேவகவுடாவை விட்டு வந்தேன். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் வெற்றிக்காக உதவினேன். அதுபோன்று உதவியதற்கு, அவர் எனக்கு நல்ல கைமாறு செய்துள்ளார்.எனக்கு மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவி கை நழுவியதற்கு, அவர் பதிலளிக்க வேண்டும். அவருடன் தற்போதைக்கு எதுவும் பேசமாட்டேன். சிவகுமாருக்கும், எனக்கும் ஒத்துப்போகாது. விரைவில் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்வேன்.முன்னாள் முதல்வர் குமாரசாமி, பலமுறை என்னை தொடர்பு கொண்டு பேசினார். தேவகவுடாவுடன் ஆலோசனை நடத்திய பின் அடுத்தகட்ட முடிவை எடுப்பேன்.பா.ஜ.,வுடன் ஒன்று சேர என்னால் எப்படி முடியும். பா.ஜ., கேசவ கிருபா; நான் பசவ கிருபா. காத்திருந்து பாருங்கள்; காலம் பதிலளிக்கும். காங்கிரசுக்கும், எனக்குமான அத்தியாயம் முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X