சென்னை : ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள், 10 கடலோர மாவட்டங்களில், 14 இடங்களில் இன்று (ஜன.,28) துவங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, ஜன., 24ல் துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கெடுப்புக்கு முந்தைய தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றும், நாளையும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கள அளவில் நடக்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலுார், நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சை,ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய10 கடலோர மாவட்டங்களில் 14 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கஉள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement