நானே சீனியர்; நானே வேட்பாளர் பிரசாரத்தை துவக்கிய தி.மு.க., நிர்வாகி

Added : ஜன 28, 2022 | |
Advertisement
மதுரை : கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை, கூட்டணி பேச்சு முடியவில்லை, வேட்புமனுவும் தாக்கல் செய்யவில்லை. இருந்தாலும் 'நான் சீனியர், என்னுடைய வார்டில் போட்டியிட எனக்கு உரிமை உள்ளது' எனக் கூறி மதுரை மாநகராட்சி வார்டு 25ல் தன்னிச்சையாக பிரசாரத்தை துவங்கியுள்ளார், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன்.மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு

மதுரை : கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை, கூட்டணி பேச்சு முடியவில்லை, வேட்புமனுவும் தாக்கல் செய்யவில்லை. இருந்தாலும் 'நான் சீனியர், என்னுடைய வார்டில் போட்டியிட எனக்கு உரிமை உள்ளது' எனக் கூறி மதுரை மாநகராட்சி வார்டு 25ல் தன்னிச்சையாக பிரசாரத்தை துவங்கியுள்ளார், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன்.

மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு பிப்.,19ல் தேர்தல் நடக்கிறது. இன்று மனுத்தாக்கல் துவங்குகிறது. வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க., தலைவரான முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், தன்னையே தி.மு.க., வேட்பாளராக அறிவித்துக் கொண்டு பீபிகுளம், மீனாட்சிபுரம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் மேள தாளத்துடன் பிரசாரத்தில் ரவீந்திரன் ஈடுபட்டார்.

ரவீந்திரன் கூறியதாவது: கட்சியில் 40 ஆண்டுகளாக உள்ளேன். தலைவர் ஸ்டாலினுக்கு என்னை நன்றாக தெரியும். எனக்கு வேட்பாளர் சீட் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் வார்டில் பிரசாரம் ஆரம்பித்துவிட்டேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X