மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நேற்றிரவு 10:00 மணிக்கு பஸ்கள் இன்றி தவித்த பயணிகளுக்கு 'ஏன் பஸ் வசதி செய்யப்படவில்லை' என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் சோழவந்தான் எம்.எல்.ஏ., சரமாரி கேள்விகள் எழுப்பி கண்டித்தார்.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சோழவந்தான், கருப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேற்றிரவு 10:00 மணிக்கு மேல் செல்ல வேண்டிய மூன்று அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய 60க்கும் மேற்பட்ட பயணிகள் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
சில நிமிடங்களில் பஸ் ஸ்டாண்ட் வந்த எம்.எல்.ஏ., அங்கிருந்த அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டார். இதையடுத்து பஸ்கள் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறியதற்கு வேண்டாம் என மறுத்துவிட்டார்.
எம்.எல்.ஏ., கூறுகையில் "மதுரையில் ஒரு ஸ்கேன் சென்டருக்கு வந்திருந்தேன். அப்போது தொகுதி மக்கள் பஸ் வசதி இன்றி தவிப்பதாக தகவல் தெரிவித்ததால் அங்கு சென்று ஊர்களுக்கு செல்ல மினி பஸ்கள் மூலம் ஏற்பாடு செய்தேன். இரவில் மூன்று அரசு பஸ்கள் இயக்கப்படாதது தெரிந்தது. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன்" என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE