சிறுதானியம் குறித்து வாகன பிரசாரம்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
திருப்பரங்குன்றம் : சிறுதானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.இத்துறை திட்டங்கள் குறித்த அலங்கரிக்கப்பட்ட பிரசார வாகனத்தை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்டையன், அட்மா திட்ட தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் இந்திரா முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் வரதராஜன்

திருப்பரங்குன்றம் : சிறுதானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

இத்துறை திட்டங்கள் குறித்த அலங்கரிக்கப்பட்ட பிரசார வாகனத்தை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்டையன், அட்மா திட்ட தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் இந்திரா முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் வரதராஜன் வரவேற்றார்.சிறு தானியங்கள் சாகுபடி முக்கியத்துவம், பயன்கள், மானிய திட்டங்கள் குறித்து திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் எடுத்துரைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். உதவி வேளாண் அலுவலர்கள் டேவிட், மனோகர், செல்வகுமார், கருப்பசாமி, சேகர், சவுந்தர், மருது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.மேலுார் வேளாண்இணை இயக்குனர் விவேகானந்தன் துவக்கி வைத்தார்.துணை இயக்குனர்கள் லட்சுமி பிரபா, தனலட்சுமி, வேளாண் உதவி இயக்குனர் செல்வி, அட்மா திட்ட தலைவர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X