'மீண்டும் மீண்டும் வழக்கு போட்டால்... ஜாக்கிரதை': எச்சரிக்கிறது உயர்நீதிமன்றம்

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை : 'கொரோனா வைரஸ் பரவலால், ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் சேரக் கூடாது' எனக் கோரிய மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக வழக்கு தொடுத்தால் அபராதம் விதிக்க போவதாகவும், பொது நல வழக்கு தொடர தடை விதிக்கப் போவதாகவும் உயர் நீதிமன்றம் எச்சரித்தது.மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
HC, High Court, Madras HC

சென்னை : 'கொரோனா வைரஸ் பரவலால், ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் சேரக் கூடாது' எனக் கோரிய மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக வழக்கு தொடுத்தால் அபராதம் விதிக்க போவதாகவும், பொது நல வழக்கு தொடர தடை விதிக்கப் போவதாகவும் உயர் நீதிமன்றம் எச்சரித்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியாளர்கள், கலெக்டர், அமைச்சர் என ஒரே இடத்தில் பலர் கூடினர். சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. 'தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. வைரஸ் பரவல் அதிகரிப்பதால், ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூட்டம் சேரக் கூடாது' என கோரியிருந்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அரசு தரப்பில் விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிபந்தனைகள் இணைக்கப் பட்டுள்ளதா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாக, மனுதாரர் தெரிவித்தார். நீதிபதிகள் 'நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றால், அவமதிப்பு வழக்கு தொடரலாம். எதற்காக, மீண்டும் வழக்கு தொடர்கிறீர்கள்? விளம்பரத்துக்காக வழக்கு போடுகிறீர்களா? முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப் போகிறோம்' என்றனர்.பின், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறியதை தொடர்ந்து, மனுவை, முதல் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி, கே.கே.ரமேஷ் தொடர்ந்த மற்றொரு வழக்கும், முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீர் நிலை தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், 'எதற்காக மீண்டும் மீண்டும் வழக்கு தொடர்கிறீர்கள்?' என கேட்டனர். இனிமேல் பொதுநல வழக்கு தொடர தடை விதிக்கப் போவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதால், மனுவை தள்ளுபடி செய்தனர். வழக்கு தாக்கல் செய்யும் போது, கவனமுடன் இருக்கவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
28-ஜன-202217:51:57 IST Report Abuse
ponssasi தீர்ப்பு பெறமுடியாத நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் வழக்கு தொடுத்து என்ன பயன்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
28-ஜன-202217:14:44 IST Report Abuse
CBE CTZN "ஏற்கனவே நீர் நிலை தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக" - பாவம் அப்பாவி நீதிபதி தான் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் தட்டாமல் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள் என்ற நினைப்பு... நீதிமனற அவமதிப்பு வழக்கு போட்டாலும் இதே கதி தான்... முதலில் தான் பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுகிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க நீங்களே ஒரு குழுவை உருவாக்கி ஆய்வு செய்து பாருங்கள்... பிறகு தெரியும் எதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று... குழுவை நியமிப்பது எல்லாம் எங்கள் வேலை இல்லை என்று நழுவாமல், பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த உங்கள் ஆர்வமும் முக்கியம்.. இதெல்லாம் நாம சொல்லி தெரியவேண்டியது இல்லை ஆனர்...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
28-ஜன-202216:49:51 IST Report Abuse
Kumar வழக்கே போடவேண்டாம்.இது விடியல் அரசு. இனி எந்தக் குறையும் மக்களுக்கு இருக்காது. பாலாறும்,தேனாறும் ஓடும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X