பாஸ்டன்: கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மாட்டேன் என கட்டாயமாகக் கூறிய நோயாளி ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக 8 லட்சத்து 72 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 6 கோடி பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 62 சதவீத குடிமக்கள் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நாள்பட்ட நோய் கொண்டவர்கள் மற்றும் முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று சிடிசி முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் தடுப்பு மருந்து தொடர்பான மூட நம்பிக்கையால் சிலர் இவற்றை செலுத்தத் தயங்கி வருகின்றனர். இதனால் பாஸ்டனில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட பின்விளைவு விபரீதமாகி உள்ளது.
பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்த ஒரு நோயாளிக்கு, இரண்டு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப் படாததால், மருத்துவமனை நிர்வாகம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மறுத்துவிட்டது. இருதயத்தை மாற்றிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறையும் என்பதால், தடுப்பு மருந்து இரண்டு செலுத்தப்படாத அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில், வைரஸ் தாக்கம், இந்த நோயாளியின் உடலில் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 31 வயதாகி தனது மகன் காத்திருந்ததாக நோயாளியின் தந்தை டேவிட் பேர்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த நோயாளி தடுப்பு மருந்து செலுத்தப்படாதவர் என்பதால் தடுப்பு மருந்து செலுத்த மருத்துவமனை நிர்வாகம் ஆயத்தமாகியது. ஆனால் இவர் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், தடுப்பு மருந்து செலுத்த விருப்பமில்லாத நோயாளிகளுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கட்டாயமாக கூறிவிட்டது. இதனை அடுத்து அவர் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

![]()
|

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement