யூக வணிகம் ஒழிந்தால் பஞ்சு விலை சீராகும்; மத்திய நிதியமைச்சரிடம் ஜவுளித்துறையினர் முறையீடு

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (2)
Advertisement
திருப்பூர்: யூக வணிகத்தில் இருந்து பருத்தியை விலக்கவேண்டும்' என, மத்திய நிதி அமைச்சரிடம், தமிழக ஜவுளித்துறையினர் முறையிட்டுள்ளனர். தமிழக ஜவுளித்துறை ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, ஜவுளித்துறையினருடன் கலந்துரையாடினார்.தமிழக ஜவுளி அமைச்சர் காந்தி, செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இந்திய ஏற்றுமதியாளர்

திருப்பூர்: யூக வணிகத்தில் இருந்து பருத்தியை விலக்கவேண்டும்' என, மத்திய நிதி அமைச்சரிடம், தமிழக ஜவுளித்துறையினர் முறையிட்டுள்ளனர்.



latest tamil news



தமிழக ஜவுளித்துறை ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, ஜவுளித்துறையினருடன் கலந்துரையாடினார்.தமிழக ஜவுளி அமைச்சர் காந்தி, செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபு தாமோதரன், தமிழ்நாடு நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் உள்பட ஜவுளித்துறையினர் பங்கேற்றனர்.

ஜவுளித்துறையினர் முன்வைத்த கோரிக்கைகள்:கடந்த 15 மாதங்களாக, மாதம்தோறும் நுால் விலை உயர்ந்துவருகிறது. இதனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.


latest tamil news



மூலப்பொருள் வாங்கும் திறன் குறைந்துள்ளதால், ஆடை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து, ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். இறக்குமதி பஞ்சு மீதான, 11 சதவீத வரியை நீக்க வேண்டும். யூக வணிகத்தில் இருந்து பஞ்சை விலக்கினால், விலை சீராகிவிடும்.

ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் கடனுக்கு வழங்கப்பட்டு வந்த, ஐந்து சதவீத வட்டி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது; இந்த திட்டத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும்.இவ்வாறு, தொழில் துறையினர் முறையிட்டனர்.கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asaithambi - மும்பை,இந்தியா
28-ஜன-202211:21:54 IST Report Abuse
asaithambi செவிடன் காதில் ஊதிய சங்குதான்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
28-ஜன-202210:41:16 IST Report Abuse
தஞ்சை மன்னர் இந்த வியாபாரம் மட்டும் அல்ல மார்வாடி கையில் இருக்கும் அணைத்து வியாபாரமும் அப்படிதான் போய் கொண்டு இருக்கு , இப்போது தங்க வியாபாரமும் அப்படிதான் போய்க்கொண்டு இருக்கு முதலில் தங்க வியாபாரிகளை ஒளித்து விட்டு பத்தர் போல வியாபாரம் மாறவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X