ராமேஸ்வரம் : தமிழக மீனவர்களை ஒழிக்க இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது என ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் தேவதாஸ் கூறியதாவது:
பல ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்திய, இலங்கை மீனவர்கள் கச்சதீவில் தங்கி, அதனை சுற்றி மீன்பிடித்து உறவுகளை வளர்த்தனர். 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த பின், தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமை பறிபோனதுடன், பலர் உயிரிழந்தனர்.நட்பு நாடான இலங்கைக்கு மத்திய அரசு ரூ. 18 ஆயிரம் கோடி கடனுதவி, அங்குள்ள தமிழர்களுக்கு இலவச வீடுகள், ரயில் பெட்டிகள் என வாரி வழங்குகிறது. இங்குள்ள இலங்கை அகதிகளுக்கும் வீடுகள், பல சலுகையை அரசு வழங்கி வருகிறது.
ஆனால் இலங்கை பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக படகுகளை பறிமுதல் செய்தும் மூழ்கடித்தும், மீனவர்களை பல நாட்களாக சிறையில் அடைத்தும் துன்புறுத்துகிறது. மீனவர்களை முற்றிலும் ஒழிக்க, அங்குள்ள மீனவர்களை போராட துாண்டி விடுகிறது. இந்நிலை நீடித்தால் இலங்கைக்கு உதவிகளை நிறுத்திட நாங்களும் போராடும் நிலைக்கு வரக்கூடும். எனவே இப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE