ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' தேர்தல் பணிகளில் சிக்கல் ஏற்படுமா

Added : ஜன 28, 2022 | |
Advertisement
மதுரை : கல்வித் துறையில் நடக்கும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வால் நகர்ப்புற தேர்தல் பணிகளில் சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19 ல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் பட்டியல் மாவட்ட தேர்தல் பிரிவில் தயார் நிலையில்

மதுரை : கல்வித் துறையில் நடக்கும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வால் நகர்ப்புற தேர்தல் பணிகளில் சிக்கல் ஏற்படும்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19 ல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் பட்டியல் மாவட்ட தேர்தல் பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜன.,24 முதல் தொடர்ந்து நடக்கிறது. பிப்.,23ல் முடியும்.கலந்தாய்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மாவட்டங்களுக்கு மாறிவிடுவர். தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களும் இதில் அடங்குவர். இதனால் தேர்தல் பணி பாதிக்கும் வாய்ப்புள்ளது.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
ஓட்டுப் பதிவின் போது பி.ஓ., (போலிங் ஆபிசர்) 1, 2, 3 நிலைகளில் தலைமையாசிரியர் முதல் இடைநிலை ஆசிரியர் வரை பணியில் ஈடுபடுத்த அந்தந்த கல்வி அலுவலகத்தில் இருந்து 'எமிஸ்' மூலம் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ்களுடன் பெயர் விவரம் தேர்தல் பிரிவிற்கு வழங்கப்பட்டு விட்டது. பலகட்ட பரிசீலனைக்கு பின் மையங்கள் ஒதுக்கும் நிலை உள்ளது.தற்போது அவர்கள் வேறு மாவட்டத்திற்கோ அல்லது ஒரே மாவட்டத்தில் தொகுதி விட்டு தொகுதியோ மாறி சென்றால் பணி மறு ஒதுக்கீடு செய்வது சவாலாக இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X