பெண்ணை மதம் மாற்றி திருமணம்; எஸ்.பி., ஆபீசில் பெற்றோர் புகார்

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (43)
Advertisement
திருப்பூர்: 'தாராபுரத்தில், 18 வயது இளம்பெண்ணை சிலர் கடத்தி சென்று, மதமாற்றம் செய்து திருமணம் செய்து அடைத்து வைத்துள்ளனர்' என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 18 வயது, கல்லுாரி மாணவி சமீபத்தில் மாயமானார். அவரை வேறு மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மதமாற்றம்

திருப்பூர்: 'தாராபுரத்தில், 18 வயது இளம்பெண்ணை சிலர் கடத்தி சென்று, மதமாற்றம் செய்து திருமணம் செய்து அடைத்து வைத்துள்ளனர்' என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 18 வயது, கல்லுாரி மாணவி சமீபத்தில் மாயமானார். அவரை வேறு மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.



latest tamil news




இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர். மாணவியின் பெற்றோர் கூறியதாவது:எங்கள் மகள் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 24ம் தேதி கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றார். அன்றைய தினம், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இருந்து போலீசார் அழைத்தனர்.

உங்களது மகள் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு வந்துள்ளார் என்று கூறி, விசாரணைக்கு போலீசார் அழைத்தனர். ஸ்டேஷனுக்கு சென்றபோது, 'உங்கள் மகளை, அசாருதீன் என்பவர் திருமணம் செய்துள்ளார்' என போலீசார் தெரிவித்தனர். எனது மகளை மிரட்டியோ அல்லது மூளைச்சலவை செய்தோ கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்து, எங்கோ அடைத்து வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, தாராபுரம் மகளிர் ஸ்டேஷன், திருப்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். தற்போது, திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தால், மனுவை வாங்க மறுக்கின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
03-பிப்-202212:23:07 IST Report Abuse
Raj பெண்ணின் சம்மதம் இல்லாமல் கடத்தி கல்யாணம் செய்து எத்தனை நாள் வைத்திருக்க முடியும்?
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-202208:21:01 IST Report Abuse
Vijayan Singapore விடியல் ஆட்சியின் சாதனைகள் தொடருகிறது, இதற்குத்தானே வோட்டுப்போட்டீர் இப்போ ஏன் அழுகின்றீர்
Rate this:
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
29-ஜன-202212:51:53 IST Report Abuse
S.Pandiarajan கூப்பிடுங்க ப்பா அண்ணாமலையை அடுத்த ஆட்டத்துக்கு
Rate this:
Venkat.K - Hyderabad,இந்தியா
30-ஜன-202215:30:46 IST Report Abuse
Venkat.Kஉங்கள் வீட்டில் நடந்தால் கூட இப்படித்தான் நடப்பீர்களா ??...
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
03-பிப்-202212:21:05 IST Report Abuse
Raj,,,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X