அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் 'நியோகோவ்' கோவிட்; வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி: தென் ஆப்ரிக்காவில் தற்போது பரவி வரும் புதிய கோவிட் வைரசான 'நியோகோவ்' அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்த கூடும் என, கோவிட் வைரசின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகர விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்: நியோகோவ் என்பது புதிய வைரஸ் அல்ல. கடந்த 2012 மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் - கோவ் வைரஸ்
நியோகோவ், வைரஸ், கோவிட், பாதிப்பு, இறப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவில் தற்போது பரவி வரும் புதிய கோவிட் வைரசான 'நியோகோவ்' அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்த கூடும் என, கோவிட் வைரசின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகர விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்: நியோகோவ் என்பது புதிய வைரஸ் அல்ல. கடந்த 2012 மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் - கோவ் வைரஸ் மற்றும் மனிதர்களிடம் கோவிட்டை ஏற்படுத்திய சார்ஸ் - கோவ் 2 ன் கலவையாக காணப்படுகிறது. நியோகோவ் வைரஸ், தென் ஆப்ரிக்காவில் முதலில் வவ்வால் இனங்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனங்களில் மட்டுமே பரவியது. தற்போது பயோ ரிக்ஸ்வி இணையத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி நியோகோவ் மற்றும் அதன் நெருங்கிய தொடர்புடைய பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளது.


latest tamil news


வூஹான் பல்கலை மற்றும் சீன உயிர் இயற்பியல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி, இந்த வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவவதற்கு, அதில் ஒரு உருமாற்றமே போதும் என தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள், மனித உடலில் உள்ள செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதால், ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இரு வைரஸ்களின் கலவையாக உள்ள நியோகோவ், 3ல் ஒருவரை உயிரிழக்க வைக்கவும்(மெர்ஸ் கோவ் வைரஸ் காரணமாக) அதிக பாதிப்பை(சார்ஸ் கோவ்2) வைரஸ் காரணமாக) ஏற்படுத்த முடியும் எனவும் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - Chennai,இந்தியா
29-ஜன-202200:35:36 IST Report Abuse
Venkatesh தென் ஆப்பிரிக்காவில் புது வைரஸ்களை உருவாக்க அல்லது கண்டு பிடிக்க சீனாவின் கட்டுப்பாட்டில் ஒரு பயோ லபோரேடோரி இருக்கும் போல , பொதுவாக புது வைரஸ் எல்லாம் அங்கிருந்து தான் பரவுது.
Rate this:
Cancel
Nallappan - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202218:36:01 IST Report Abuse
Nallappan கடவுள் உங்களுக்கு கொடுத்த பரீட்சை இது இனிமேலாவது திருந்தி சீன பொருட்களை வாங்காமல் தேசத்தின் மீது பற்று வைத்து நியாயமான வாழ்க்கையை வாழ்ந்தால் கொரனா குறைய வாய்ப்பு இருக்கிறது...
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
28-ஜன-202218:16:35 IST Report Abuse
தியாகு நல்லவேளை இப்போது திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி இல்லை. இப்ப அவர் இருந்திருந்தா நியாகோவ் வைரஸை வைத்து ஒரு பத்தாயிரம் கோடிகளை விஞ்ஞான முறையில் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டு தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X