கடந்தாண்டு பெய்த கூடுதல் மழையால்... 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கோவை: தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஒவ்வொரு மாதமும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். கண்காணிப்பு கிணறுகளில் இம்மாதம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஒவ்வொரு மாதமும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். கண்காணிப்பு கிணறுகளில் இம்மாதம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.



latest tamil news




இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் மட்டம் சரிவை சந்தித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் உயர்ந்துள்ளது.

வேலுாரில் 3.69 மீட்டர், தர்மபுரியில் 4.47, திருச்சியில் 3.43, ஈரோட்டில் 3.29, கோவையில் 1.18, திருப்பூரில் 2.47, நீலகிரியில் 0.46 மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் 2.97 மீட்டர், மதுரையில் 0.95, ராமநாதபுரத்தில் 0.35, சிவகங்கையில் 1.84, தேனியில் 2.27, விருதுநகரில் 2.40, திருநெல்வேலியில் 2.30, தென்காசியில் 2.68, கன்னியாகுமரியில் 0.80 மீட்டரும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.


latest tamil news




கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரு பருவங்களிலும் பெய்த கூடுதலான மழை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202216:35:22 IST Report Abuse
Kasimani Baskaran திமுக மட்டும் ஆட்சியில் இல்லை என்றால் எல்லாத்தண்ணீரும் கடலுக்குள் சென்று கடல் மட்டத்தைத்தான் உயரித்தியிருக்கும் - உபிஸ்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-ஜன-202211:32:01 IST Report Abuse
Lion Drsekar இயற்க்கைக்கு நன்றி கூறவேண்டும், எப்படி எப்படியோ கடலுக்கு அனுப்பியும் நிலத்தடியில் சேர்ந்திருக்கிறது என்றால் பாராட்டுக்கள் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X