சென்னை: தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வினோஜ் பி.செல்வம் என்பவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், மக்களிடையே வெறுப்பையும் பகைமையை உருவாக்கிக் பொது அமைதியை கெடுக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாகவும், திமுக.,வின் 200 நாட்கள் ஆட்சியில் 134 கோயில்கள் இடிப்பு என தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வினோஜ் பி.செல்வம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 505(1)(b), 505(2) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எச்சரிக்கை
இதனிடையே, மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE