பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க டிராய் உத்தரவு

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (19)
Advertisement
புதுடில்லி: செல்போன் பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்ற வேண்டும்
TRAI, Prepaid, Recharge Vouchers, டிராய், ரீசார்ஜ், பிரீபெய்டு, காலம், நிர்ணயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: செல்போன் பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 நாட்களுக்கு பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் கிடைத்து வந்த நிலையில், தற்போது அது 28 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிலை நிலவியது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுவந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு, ஒரு மாத ரீசார்ஜ் திட்டத்திற்கான கால அளவை 28 நாட்களில் இருந்து 30 நாளாக உயர்த்தி நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜன-202218:59:52 IST Report Abuse
M  Ramachandran அதற்க்கு தான் சிறிது கஷ்டமாக இருந்தாலும் பி எஸ் என் எல் ஐ உபயோகிஙகள் மார்க்கெட் பிடித்ததும் அவர்கள் வேலையை காட்டுகிறார்கள். தனியார் நம் கன்ணில் வீரலை விட்டு ஆட்டுவார்கள்.முதலில் என்ன வோங் நன்ம்மை செய்வதுபோல் சில இலவசங்கள் தருவார்கள் வியாபாரம் படித்ததும் உச்சாணிக்கு ஏறி விடுவார்கள்.
Rate this:
Cancel
Valavan - Chennai,இந்தியா
28-ஜன-202218:56:42 IST Report Abuse
Valavan நெட்ஒர்க் ஒழுங்காக வேலை செய்யாமல் கட்டணம் வசூலிக்க தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28-ஜன-202218:54:16 IST Report Abuse
raghavan அவ்வளவுதானே, அதற்கேற்றார் போல விலையை ஏற்றிவிடுவார்கள். மிஸ்ட் கால் வைத்து காலத்தை ஒட்டியதெல்லாம் எப்பவோ மலையேறிப்போச்சு. ஒவ்வொரு சிம்மிற்கும் மாதம் இருநூறு தண்டம் அழுதே ஆகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X