வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சீனாவுடன் எல்லை விவகாரம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களை பார்லிமென்டில் எழுப்புவது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்கான அக்கட்சியின் கூட்டம் நடந்தது.
வீடியோ கான்பரன்சிங் முறையில், கட்சி தலைவர் சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம், ஏர் இந்தியாவில் பங்கு விலக்கல், பணவீக்கம், சீனாவுடன் எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒத்த எண்ணங்களுடைய கட்சிகளையும் ஒருங்கிணைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், ஏகே அந்தோணி, வேணுகோபால், மல்லிகார்ஜூனா கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, கவுரவ் கோகோய், சுரேஷ், ஜெய்ராம் தாக்கூர், மாணிக்கம் தாகூர், மணிஷ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE