699 பதவிக்கு தேர்தல்: வேட்பு மனுதாக்கல் இன்று ஆரம்பம்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி உள்பட, 699 கவுன்சிலர் தேர்வுக்கு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், பிப்., 19ல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, ஆறு நகராட்சி, 31 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சியில், 60 வார்டுக்கு கவுன்சிலர் தேர்வு செய்யப்பட

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி உள்பட, 699 கவுன்சிலர் தேர்வுக்கு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், பிப்., 19ல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, ஆறு நகராட்சி, 31 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சியில், 60 வார்டுக்கு கவுன்சிலர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் மூலம், மேயர், துணை மேயர், நான்கு மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிக்கு தேர்வு நடத்தப்படும். நகராட்சிகளில், 165 வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெறுவோர் மூலம், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 31 பேரூராட்சிகளில், 474 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலராக கமிஷனர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, மண்டலத்துக்கு இருவர் வீதம் எட்டு பேர் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு மண்டலங்களிலும், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தனித்தனி அறை ஒதுக்குவது, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடக்கின்றன. இன்று தொடங்கும் மனுதாக்கல், பிப்., 4 வரை நடக்கிறது. 5ல் மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.

சுவர் விளம்பரம் அழிப்பு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், முள்ளுவாடி கேட், தொங்கும் பூங்கா, மாநகராட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் நேற்று அகற்றப்பட்டன. சுவர்களில் வரையப்பட்ட கட்சி விளம்பரங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் சுண்ணாம்பு பூசி அழித்தனர்.

சேலத்துக்கு 5வது மேயர்: சேலம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 1996ல் நடந்த முதல் தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த சூடாமணி மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2001 முதல், 2006 வரை அ.தி.மு.க.,வின் சுரேஷ்குமார், 2006 முதல், 2011 வரை தி.மு.க.,வின் ரேகாபிரியதர்ஷினி, 2011 முதல், 2016 வரை அ.தி.மு.க.,வின் சவுண்டப்பன் மேயராக தேர்வு செய்யப்பட்டனர். ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது நடக்கும் தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் மூலம், சேலத்தின், 5வது மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X