வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கண்ணாடி விரியன் பாம்பிடம், ‛இங்கே வராதே, திரும்பி போ' என கட்டளையிட அதனை கேட்டு அப்படியே திரும்பி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒருவரின் சொல்பேச்சு கேட்டு அதன்படி நடப்பவர்கள் வெகு சிலரே. அதிலும், தன்னை விட உயர்ந்தவரின் கட்டளைகயை அப்படியே கேட்டு அடிபணிந்து நடப்பவர்கள் அரிது. அப்படியிருக்கையில், கோவையில் பாம்பு ஒன்று ஒருவரின் சொல்பேச்சு கேட்டு கட்டளைக்கிணங்கி வீட்டுக்குள் வராமல் சென்றுள்ளது ஆச்சரியமடைய செய்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையம், லட்சுமி நகரில் வசிப்பவர் கனகராஜ், 45. எலக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவரது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.,27) மாலை 6 மணியளவில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று, வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதனை கவனித்த கனகராஜ், பாம்பிடம் ‛போ.. இங்கே வராதே.. திரும்பி காட்டுக்குள்ளே போ..' என கட்டளையிட அதனை கேட்ட அப்பாம்பு, திரும்பி சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அங்கிருந்து சென்ற பாம்பு, அருகில் இருந்த பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த கோவை வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE