திருப்பதி பெருமாள் மாலைகளில் இருந்து ஊதுபத்தி

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (4)
Advertisement
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலைகளில் உள்ள மலர்கள் வீணாவதை கண்ட கோவில் நிர்வாகம் அந்த மலர்களைக் கொண்டு ஊதுபத்தி உள்ளீட்ட நறுமணப் பொருட்கள் தயாரித்து விற்க முன்வந்துள்ளனர்.‛நமாமி கோவிந்தா' என்ற பிராண்டில் வெளிவரும் இந்த நறுமணப் பொருட்களுடன் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களில் இருந்து

latest tamil newsதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலைகளில் உள்ள மலர்கள் வீணாவதை கண்ட கோவில் நிர்வாகம் அந்த மலர்களைக் கொண்டு ஊதுபத்தி உள்ளீட்ட நறுமணப் பொருட்கள் தயாரித்து விற்க முன்வந்துள்ளனர்.
‛நமாமி கோவிந்தா' என்ற பிராண்டில் வெளிவரும் இந்த நறுமணப் பொருட்களுடன் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பஞ்ச காவ்யா என்ற மக்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடும் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.இதற்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆஷிர்வாத், ஆயுர்வேத மருந்தகத்தின் தொழில்நுட்ப ஆதரவு உள்ளது.


latest tamil newsமிகக்குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் இதன் விலையும் தரமும் இருக்கும் என்பதை அறிவித்த திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தேர்ந்து எடுக்கப்பட்ட பதினைந்து உயர் மருத்துவமனைகளில் தேவஸ்தான ஊழியர்கள் காசில்லாமல் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் சுகாதார அட்டை வசதியையும் வழங்கினார்.


latest tamil newsமேலும் மாநில அரசுடன் இணைந்து இயற்கை விவசாயம், மாட்டு சிறுநீரில் இருந்து கரிம உரங்கள் தயாரித்தல்,தெலுங்கு மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீனமயமாக்கப்பட்ட கோசாலைகளை உருவாக்குதல், பஞ்சகவ்யா பொருட்கள் தயாரிப்பில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth Kumar - Chennai,இந்தியா
01-பிப்-202217:26:21 IST Report Abuse
Vinoth Kumar நல்லதொரு நிர்வாகத்திற்கு இக்கோயில் மிகச் சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் நல்ல பல கோயில்கள் உள்ளன, ஆனால் நிர்வாகம் மிக மோசம். பலமுறை பாதயாத்திரையாக அலிபரியில் இருந்து பாதயாத்திரையாக பயணம் செய்து தரிசனம் செய்துள்ளேன். இலவச தரிசனம் என்பதற்காக, நமது ஊர்களில் இருப்பதுபோல அல்லாமல் நல்ல வசதிகள் இருந்தன. அவர்கள் கழிப்பறை சுத்தம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சுத்தமாக பராமரித்து வைத்து இருக்கிறார்கள். செருப்பு இல்லாமல் அந்தக் கழிவறைக்கு சென்று வர இயலும், கொடிய நெடியும் கிடையாது. பாதசாரிகளுக்கு ஆங்காங்கே சிற்றுண்டிகளும் வழங்குவதுண்டு. நடந்து செல்லும் பாதையும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். கூடுதலாக ஒரு லட்டும் கிடைக்கும். கோயில் வளாகம் அவ்வளவு அருமையாக பராமரிக்கப்பட்டு இருக்கும். மேலும் சொல்லவேண்டுமென்றால், அங்கிருக்கும் கடைகளில்கூட அடாவடியாக விலை வைத்து விற்பது கிடையாது (எனது அனுபவத்தில்). நல்லதொரு முயற்சிதான் , வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-202207:59:08 IST Report Abuse
Lion Drsekar இந்த செய்தி யாருக்குமே தெரியாமல் இருந்தது தற்போது தெரியவந்தது தினமலரால், திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள், திருமலா என்றாலே ஒரு அமைதி, கடல் போன்ற மக்கள் கூட்டம், அதில் எல்லோர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி, அங்கு விற்கப்படும் லட்டு என்று அறிந்த நமக்கு இப்படி ஒரு பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் இறைவனுக்கு சாற்றிய அந்த புனித மலர்களில் தயாரிக்கப்படும் நறுமண ஊதுவதியை எல்லோரும் வாங்கி பயன்பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி, மீண்டும் தினமலருக்கு நன்றி, இந்த செய்தியை திருமலா தேவஸ்தான டிவி கூட செய்தியாக வெளியிடவில்லை என்று நினைக்கொறோம், அப்படி இருக்க நல்லதோர் செய்தியை வெளியிட்ட தினமலருக்கு மீண்டும் நன்றி வந்தே மாதரம்
Rate this:
Cancel
Veerakumar C - Vellore,இந்தியா
01-பிப்-202206:59:58 IST Report Abuse
Veerakumar C Pl post web site for parches online. & any training center.in chitoor
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X