மாமியார் தீக்குளிக்க முயற்சி; மருமகள் மிரட்டுவதாக புகார்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
சேலம்: சேலம், பள்ளப்பட்டி, சின்னேரிவயல்காட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 55. நேற்று காலை, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார், துணை கமிஷனர் மாடசாமியிடம் போலீசார் அழைத்துச்சென்றனர். அவரிடம், ராஜேஸ்வரி புகார் அளித்தார், அதில், 'சேலம் ஊர்காவல் படையில் பணிபுரியும் மருமகள் காந்திமதி, 32, சொத்தை எழுதி கேட்டு

சேலம்: சேலம், பள்ளப்பட்டி, சின்னேரிவயல்காட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 55. நேற்று காலை, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார், துணை கமிஷனர் மாடசாமியிடம் போலீசார் அழைத்துச்சென்றனர். அவரிடம், ராஜேஸ்வரி புகார் அளித்தார், அதில், 'சேலம் ஊர்காவல் படையில் பணிபுரியும் மருமகள் காந்திமதி, 32, சொத்தை எழுதி கேட்டு மிரட்டுவதோடு, வீட்டில் இருந்து அடித்து துரத்துகிறார்' என தெரிவித்திருந்தார். அதேநேரம், கணவர் பரசுராமனுடன் வந்த காந்திமதி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'மாமியார் ராஜேஸ்வரி பணம் கேட்டு மிரட்டுகிறார்' என தெரிவித்திருந்தார். இரு புகார் குறித்தும் பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்க, துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X