வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவிடம் இருந்து 374 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்க உள்ளது.
இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஏவுகணைகளை, நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து ஏவ முடியும். இந்த ஏவுகணைகளை, பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்(பிஏபிஎல்) என்ற தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரையில் இருந்து ஏவும் பிரமோஸ் ஏவுகணைகளை விற்பதற்கான ஒப்பந்தத்தில், பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு துறையுடன் பிஏபிஎல் நிறுவனம் கையெழுத்து போட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கையில், இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா ஏற்கனவே, அருணாச்சல பிரதேசம், லடாக்கில் சீன எல்லை ஒட்டிய பல இடங்களில் பிரமோஸ் ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE