மாணவி தற்கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (11)
Advertisement
மதுரை: அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க கோரிய வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
மாணவி தற்கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க கோரிய வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.


தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று (ஜன.,28) நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதுரை: விசாரணை முறையாக வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. மாணவி வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.


latest tamil news


தமிழகத்தில் பிரச்னையை உருவாக்கவே மாணவியின் இறப்பிற்கு பிறகு வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையில் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த அன்றே பரப்பியிருக்கலாமே? வீடியோவை ஆய்வு செய்த தடயவியல் துறை அறிக்கை அளிக்க 5 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு அரசியலாக்கப்படுகிறது. இவ்வாறு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202208:56:26 IST Report Abuse
பேசும் தமிழன் அது எதிர்பார்த்த ஒன்று தான்... CBI விசாரணை தான் உண்மையை வெளிக்கொண்டு வரும்... ஏனெனில் ஆளும் அரசு அதிகாரிகளே குற்றம் நடக்கவில்லை என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்... நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை
Rate this:
Cancel
kanisha - CHENNai,இந்தியா
29-ஜன-202208:08:57 IST Report Abuse
kanisha திருடர்கள் முன்னேற்ற குழுவுக்கு வழக்கு என்பது ஹல்வா சாப்பிடுவது போன்றது எங்க எப்படி அடிச்சா தீர்ப்பு அதற்கு சாதகமாக பெற முடியும் என்பது அதற்க்கு தெரியும் இந்த வழக்கை பொறுத்தவரை அதன் முதலாளிகளின் உதவி வேறு இருக்கிறது இந்த அந்நிய மத வியாபாரிகளின் அடிமை அரசுக்கு
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
29-ஜன-202206:50:47 IST Report Abuse
தமிழன் CBI தான் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X