நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவிகள் சாதனை: மருத்துவ படிப்பில் 7 மாணவிகளுக்கு இடம் கிடைத்தது

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (2)
Advertisement
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7 பேர் மருத்துவ படிப்புக்கு

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
மாணவிகள் ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கிருத்திகா கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரிக்கும் அப்ரின் பாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வாகியுள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார் ஆனந்த பைரவி கூறுகையில், திருநெல்வேலியில் எங்கள் மாநகராட்சி பள்ளியில் 4363 மாணவிகள் பயில்கின்றனர்.கடந்த 2010ல் மாணவி ஜாஸ்மின் மாநில முதலிடம் பெற்றார். தொடர்ந்து 6 முறை மாநில இடம் பெற்றோம். இந்த முறை இத்தனை மாணவிகளுக்கு மருத்துவ இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சிலரை எதிர்பார்த்தோம். இதற்காக நீட் தேர்வில் பயிற்சி அளித்த ஆசிரியை வராகினியை பாராட்டுகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhandapani - Madurai,இந்தியா
29-ஜன-202207:47:27 IST Report Abuse
Dhandapani மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் . இதற்காக உழைத்த அணைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜன-202219:45:02 IST Report Abuse
sankaseshan தன்னம்பிக்கை இல்லாமல் தோல்வி உற்று தற்கொலை செய்துகொள்ளும் மாணவிகளுக்கு நடுவில் முயன்று படித்து வெற்றி பெட்ர மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X