லக்னோ:காங்கிரசிலிருந்து விலக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ் பாப்பர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி, மார்ச் 7 வரை ஏழு கட்டமாக நடக்கிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், காங்கிரசிலிருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இம்மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ் பாப்பர். ஹிந்தி நடிகரான இவர், மூன்று முறை லோக்சபா உறுப்பினராகவும், இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக, 2016 - 19ம் ஆண்டு வரை இருந்த இவர், சமீபகாலமாக கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த ஆண்டுக்கான 'பத்ம பூஷண்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பற்றி காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், குலாம் நபி ஆசாத்தை ராஜ் பாப்பர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இது, கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ராஜ் பாப்பர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன் அடிக்கடி பேசி வருவதாக கூறப்படுகிறது. உ.பி.,யில் முதல்கட்ட தேர்தல் நடப்பதற்கு முன், ராஜ் பாப்பர் காங்கிரசுக்கு முழுக்கு போட்டு விட்டு, சமாஜ்வாதி கட்சியில் இணைவார் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement