போபால்:மத்திய பிரதேசத்தில், உள்ளாடை குறித்து கருத்து தெரிவிக்கையில், கடவுளை தொடர்புபடுத்தி பேசிய 'டிவி' நடிகை ஸ்வேதா திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'ஷோ ஸ்டாப்பர்' என்ற ஹிந்தி வலை தொடர் பிரபலமாகும்.இதில், 'டிவி' நடிகை ஸ்வேதா திவாரி நடித்துள்ளார். அவருடன், 'மஹாபாரதம்' தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற நடிகர் சவுரவ் ராஜ் ஜெயின் நடித்துள்ளார். இவர் இந்த தொடரில் உள்ளாடை வடிவமைப்பாளராக நடித்துள்ளார்.
சமீபத்தில், தலைநகர் போபாலில், இந்தத் தொடரின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. இதில் தொடரில் நடித்துள்ள நடிகர், நடிகையர் பங்கேற்று செய்தியாளர்களுடன் உரையாடினர். அப்போது ஸ்வேதா திவாரி கூறுகையில், 'என் உள்ளாடைகளை கடவுள் தான் அளவெடுத்தார்' எனக் கூறினார். நடிகர் சவுரவ் ஜெயின், முன்பு நடித்த கிருஷ்ணரின் கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி அவர் அவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, போலீசாருக்கு மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டார்.இந்நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, சோனு பிரஜாபதி என்பவர் அளித்த புகாரின்படி, நடிகை ஸ்வேதா திவாரி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு விரைவில் 'சம்மன்' அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE