ஜன., 29, 1998
மதுரை மாவட்டம் பேரையூரில், 1908- ஜூன் 6ல் பிறந்தவர், பி.எஸ்.பி.பொன்னுசாமி; வத்திராயிருப்பில் வசித்து வந்தார். இளம் வயதில், மதுரையில் காந்தியை சந்தித்ததில் இருந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தார்.ரயில் கவிழ்ப்பு சதி, தந்திக் கம்பிகள் அறுப்பு, கள்ளுக் கடைகளுக்கு தீ வைப்பு போன்றவற்றில், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். போலீசார் இவரை கைது செய்து, சித்ரவதை செய்து சிறையில் அடைத்தனர்.'சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு' ஆகிய போராட்டங்களில் பங்கேற்று, சிறையில் செக்கு இழுத்தார்; சுவரில் உள்ள இரும்பு வளையங்களில் கைகளைப் பிணைத்து நிற்க வைக்கும், 'நிலை விலங்கு' தண்டனை பெற்றார்.சுதந்திரம் பெற்ற பின், அரசியல் பணியுடன் ஹரிஜன சேவை, கதர் மற்றும் கூட்டுறவு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம் மாவட்ட காங்., செயலராகவும் பணியாற்றினார். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டு, கோவில் திருப்பணிகளில் முக்கிய பங்காற்றினார். 1998 ஜன., 29ல் தன் 90வது வயதில் இயற்கை எய்தினார்.
தியாகி பி.எஸ்.பி.பொன்னுசாமி பிள்ளை காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE