போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா

Added : ஜன 28, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டுத் தனிமையில் உள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஜிவால், 57. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், டி.ஜி.பி., அந்தஸ்தில், சென்னை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலை, 7:30 மணியில் இருந்தே பணிகளை கவனிக்க துவங்கி விடுவார். காலை, 9:00 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார்.

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டுத் தனிமையில் உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஜிவால், 57. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், டி.ஜி.பி., அந்தஸ்தில், சென்னை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலை, 7:30 மணியில் இருந்தே பணிகளை கவனிக்க துவங்கி விடுவார். காலை, 9:00 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார். கோப்புகள் மேஜையில் தேங்குவதை தவிர்த்து விடுவார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.

இரு தினங்களுக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அதன்பின், இவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

காய்ச்சல் அதிகமானதால், இன்று காலை கொரோனா தொற்று பரிசோதனை செய்தார். மாலையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டுத் தனிமையில் உள்ளார். மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X