வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 'ஏர் - இந்தியா' விமானங்களில் புறப்பாடுக்கு முன்னதாக, அந்நிறுவனம், 'டாடா' குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த தகவல், விமானி வாயிலாக பயணியருக்கு அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தை, 'டாடா' குழுமத்தின் துணை நிறுவனமான, 'டாலெஸ் பிரைவேட் லிமிடெட்' 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு ஏலத்தில் எடுத்தது.
![]()
|
இதையடுத்து, நிறுவனத்தை முறைப்படி ஒப்படைக்கும் பணி நேற்று முடிவடைந்தது; 69 ஆண்டுகளுக்குப் பின், ஏர் - இந்தியா மீண்டும் டாடா வசம் வந்தது.
இந்நிலையில் ஏர் - இந்தியா விமானங்களின் பயணத்தின் போது, இந்த நிர்வாக மாற்றம் தொடர்பான தகவல் பயணியருக்கு அறிவிக்கப்பட்டது. விமானங்கள் புறப்படுவதற்கு முன், விமானிகள் ஒலிபெருக்கி வாயிலாக இந்த தகவலை பயணியருடன் பகிர்ந்து கொண்டனர் அதன் விபரம்:
அன்பான பயணியருக்கு, நான் உங்கள் விமானி பேசுகிறேன். வரலாற்று சிறப்புமிக்க பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம். 69 ஆண்டுகளுக்கு பின், ஏர் - இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் வசம் வந்துள்ளது. ஒவ்வொரு ஏர் - இந்தியா விமானத்திலும் புதுப்பிக்கப்பட்ட சிறப்பான சேவையை உங்களுக்கு அளிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ஏர் - இந்தியாவின் எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மகிழ்ச்சியான பயணத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி.இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement