பெங்களூரு : சிக்கநாயகனஹள்ளியில் போட்டியிடும்படி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம், காங்., தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயச்சந்திரா மற்றும் சிக்கநாயகனஹள்ளியின் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்து பேசினர்.அடுத்த தேர்தலில் சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிடும்படி, அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இத்தொகுதியில் பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மையின வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம். துமகூரின் 11 சட்டசபை தொகுதிகள், பழைய மைசூரின் சில பகுதிகள், ஷிவமொகா, தாவணகரேவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இங்கு போட்டியிட வேண்டும் என்றனர்.அதன்பின் முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஜமிர் அகமது கானை சந்தித்த குழுவினர், சிக்கநாயகனஹள்ளியில் போட்டியிடும்படி சித்தராமையா மனதை கரைக்கும்படி கோரினர்.மூத்த தலைவர் ராஜண்ணா கூறியதாவது:வெற்றி வாய்ப்பு குறித்து, சிக்கநாயகனஹள்ளியில் ஆய்வு செய்யும்படி சித்தராமையாவிடம் கேட்டுக்கொண்டோம். அவரும் சம்மதித்துள்ளார். கட்சியை பலப்படுத்தும்படி கூறினார்.சித்தராமையாவுக்கு வயதானதால், தொலைவிலுள்ள பாதாமிக்கு அவ்வப்போது பயணிக்க முடியாது. சிக்கநாயகனஹள்ளியில் போட்டியிட வேண்டுமென்பது, எங்களின் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.சிக்கநாயகனஹள்ளி, அமைச்சர் மாதுசாமி சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement