புதுடில்லி:பா.ஜ.,வின் சொத்து மதிப்பு, 2019 - 20ம் ஆண்டில் 4,847 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய மற்றும் மாநில கட்சிகள், 2019 - 20ம் நிதி ஆண்டுக்கான தங்கள் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளன. பா.ஜ., தனக்கு 4,847 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. கட்சிகளின் சொத்து மதிப்பில், பா.ஜ., முதலிடத்தைப் பிடித்துஉள்ளது. இரண்டாவது இடத்தை, பகுஜன் சமாஜ் கட்சி பிடித்துள்ளது.
இது தன் சொத்து மதிப்பை 698 கோடி ரூபாயாக அறிவித்து உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் தன் சொத்து மதிப்பு 588 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. மாநில கட்சிகளில், 563 கோடி ரூபாய் மதிப்புடன் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. 301 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களுடன், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி இரண்டாமிடத்திலும், 267 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களுடன் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திலும் உள்ளன. தி.மு.க., 164 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களுடன், ஆறாம்இடத்தில் உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE