சென்னை:இலங்கை கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், விமானம் வாயிலாக சென்னை வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், 2021 டிசம்பர் 9ல், மண்டபம் கடல் பகுதியிலிருந்து, மீன்பிடிக்கச் சென்றனர்.எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்; படகு மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர்.அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூவரையும் விடுவிக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.மத்திய வெளியுறவுத் துறை வாயிலாக, தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ௫ல், மூவரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்திய துாதரக அதிகாரிகள், மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
பின், மூன்று பேரும் விமானம் வாயிலாக, சென்னை வந்தடைந்தனர்.அவர்களை, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement